Ads Area

வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்குடனும் நல்லிணக்கக் குழு உறுப்பினர்கள் பதியதலாவையில் விழிப்புணர்வு வீதி நாடகமும்,நல்லிணக்க விஜயமும் ... !

 (கல்முனை நிருபர்)


ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் (HELVETAS) நிறுவனத்தின் இணை அனுசரணையுடன்,சமாதானமும் சமூகப்பணியும் (PCA) அமைப்பு அமுல் படுத்தி வரும் வை-சென்ச்(Y-Change)நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பிரதேச நல்லிணக்கக் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நல்லிணக்க விழிப்புணர்வு வீதி நாடகம் (12) பதியதலாவ பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்குடனும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த வீதி நாடகம் இடம்பெற்றது

மேலும் இளையோர்கள் பிரதேச ரீதியாக  நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக காணப்படும் விடயங்களை இனங்கண்டு அதனை குறைப்பதற்கான வழிகாட்டல் மூலம் இளைஞர்கள்,யுவதிகளின் சமூகங்களின் மத்தியில்  நல்லிணக்க முரண்பாடுகள் இன்றி தீர்மானம் எடுக்கும்திறன்,தலைமைத்துவதிறன்,சமூகங்களின் இடையே காணப்படும் ஒற்றுமை போன்றவற்றை வெளிக்காட்டும் வகையில் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட மை குறிப்பிடத்தக்கது

மேலும் முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற பதியதலாவைக்கான இளைஞர்களின் விஜயத்தின் அங்கமாக பதியதலாவ விகாரைக்கு சிங்கள மக்களின் கலாசார மற்றும் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதற்கான நல்லிணக்க விஜயம் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான விளக்கமும் விகாரை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பதியதலாவ மத்திய மகாவித்தியாலயத்தில் மூவின இளைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள்,சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் பதியதலாவ,தெஹியத்தக்கண்டிஆகிய பிரதேச செயலகங்களின் அதிகாரிகள்,சமாதானமும் சமூக பணி யும் நிறுவனத்தின் (PCA) தேசிய  பணிப்பாளர் ரி.தயாபரன்,வை-சென்ச்  வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,டப்ளியு.எம்.சுரேகா,சமாதான தொண்டர்களான டி.டிலக்சினி,ஏ.எம்.ஹசினி,இஷ்ரத் அலி,உட்பட கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் பதியதலாவ பிரதேச  100 க்கும் மேற்பட்ட மூவின இளைஞர்,யுவதிகள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe