Ads Area

அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” : பெண்களுக்கு சமையல் கலை செயன்முறையும், பிரசவ கூடைகள் வழங்கி வைப்பும் !

 நூருல் ஹுதா உமர்


சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு “அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளின் கீழ் 112 ஆவது சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாவின் ஒருங்கிணைப்பில் கீழ் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இரண்டு நிகழ்வுகள்  இடம்பெற்றன.

முதல் நிகழ்வாக காலையின் இடம்பெற்ற நிகழ்வில்  எடின்பரோ (Edinboroug)  நிறுவனம் மற்றும் கொழும்பு கொமோடிட்ஸ் ( Colombo Commodities) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் ஒரு தொகுதி பெண்களுக்கு சமையல் தொடர்பான செயல்முறைகள் வழங்கப்பட்டு பங்கு பற்றுனர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சமையல் கலை வல்லுநர் எம்.எம்.றிபாஸ் கலந்து கொண்டு செய்முறைகளை செய்து காட்டினார்.

பிற்பகல் இடம்பெற்ற இரண்டாவது நிகழ்வில் 54 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ கூடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு திருகோணமலையைச் சேர்ந்த காப்போம் நிறுவனமானம் அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe