Ads Area

மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் சிறகில் சிக்கிய வானம்" நூல் வெளியீடு

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் சிறகில் சிக்கிய வானம்"  (பயணக்கட்டுரைகளின் தொகுதி) எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை  (11) சனிக்கிழமை காலை மு.ப.8.30 முதல் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறும்.

(SRI LANKA PEN CLUB) ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், ஒலி - ஒளி பரப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் பா ஹாஷிம் பா அலவி அஷ்ஷெய்க் இர்பான் மௌலானா முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.

ஓய்வுநிலை பல்கலைக் கழகப் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதிர் மற்றும் 
பேஜஸ் அறிவு மையத்தின் பணிப்பாளரும் ஆய்வாளருமான சிராஜ் மஷூர் ஆகியோர் நூல் மீதான உரைகளை நிகழ்த்துகின்றனர்.
   
இந்நிகழ்வில், எம்.எச்.எப். நுஸைபா, எஸ்.பாத்திமா சுஜிதா ஆகியோர் கிராஅத் மொழிவதோடு, சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபரும் அமைப்பின் கணக்காய்வாளருமான றிப்கா அன்ஸார் வரவேற்புரையும் அமைப்பின் உபதலைவி ஷாமென் நிஸாம்டீன் அறிமுகவுரையையும் நிகழ்த்துவதோடு, ஆசிரியை முப்லிஹா பிர்தௌஸ் மற்றும் ஒலுவில் கவிஞர் அஸீஸ் எம் பாயிஸ் ஆகியோர் பாடல் பாடுகின்றனர்.

நாவலாசிரியர், தீரன் ஆர்.எம்.நௌஷாத், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் கலாநிதி மஸ்ரூபா முகம்மட், ஆஸ்ட்ரேலியா வானொலியின் வளர்பிறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது முஹ்ஸீன், கவிஞர், பாடலாசிரியர் தேசமான்ய பஹ்மி ஹலீம்தீன், அம்பாறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் இஸ்மாயீல் தம்பிலெப்பை,
அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ எல்.தௌபீக் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் எஸ்.யூ.கமர்ஜான் பீவி, திருகோணமலை ஸாஹிறா கல்லூரி பிரதியதிபர் மர்ளியா சக்காப், கல்முனை கலாசார அதிகார சபையின் செயலாளர், ஆசிரியர் கவிஞர் விஜிலி மூஸா, காத்தான்குடி மட்/மம/ ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீறா கலீல்தீன், சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் மஹீஸா பானு ஜெஸூர், சாய்ந்தமருது லத்தீபா காரியப்பர் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து 
கொள்கின்றனர். 

இன்னும் பல பிரமுகர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வை மின்னல் வெளியீட்டகத்தின் பணிப்பாளரும் நாவலாசிரியருமான அஸீஸ்.எம்.பாயிஸ்  தொகுத்து வழங்குகிறார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe