செவிப்புலனற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்தார்.
செவிப்புலன் அற்ற 50 பேரை உள்ளடக்கிய ஆய்வில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த வாரத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.