Ads Area

மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி .! மனைவி படுகாயம்.| Mother-in-law killed in son-in-law's attack. Wife seriously injured.

 வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில், இன்று வியாழக்கிழமை மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதலாளியின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியைச் சேர்ந்த டி.பி. அமராவதி (வயது 60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது மகளான துலிகா ரத்னசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவனுக்கும் , மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டிலிருந்த கோடரி மற்றும் கத்தியைக் கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

இதனை தடுக்கச் சென்ற மனைவியின் தாயார் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தாக்குதலை முன்னெடுத்த நபரை அயலவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

thanks-thinakkural



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe