குறித்த விடயம் தொடர்பில் எமக்கு செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக, தங்களது அமைப்பிலுள்ள, மற்றும் அமைப்பின் கீழ் பதியப்படாத சலூன் கடைகள் முஸ்லிம்கள் பரவலாக உள்ள இடங்களில் ஜும்மா தொழுகை நேரத்திலும், இரவு வேளைகள் நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னரும் கடைகளைத் திறந்து சிகை வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
01.03.2023ஆந் திகதியிலிருந்து சலூன் கடைகளைத் திறந்திருப்பது தொடர்பில் கீழ்வரும் விடயங்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
✓ முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள சலூன் கடைகளை ஜும்ஆ தினத்தில் மு.ப 12.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை மூடுதல்
✓ சகல சலூன் கடைகளும் இரவு 10.00 மணியுடன் மூடுதல்
மேற்படி விடயங்களை தங்களது சலூன் கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பதுடன், இதனை நடைமுறைப்படுத்தாத சலூன் கடை உரிமையாளர்களின் வியாபார உத்தரவு பத்திர அனுமதி இரத்துச் செய்யப்படுவதுடன், பிரதேச சபைகள் சட்டத்திற்கமைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பதனையும் மன வருத்தத்துடன் அறியத் தருகின்றேன்.


