Ads Area

சுற்றுலா பயணிகளுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு.| Special Task Force security for tourists.

 இலங்கைக்கு வரும்சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இது தொடர்பான கலந்துரையாடல் பொது மக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சில் நடைபெற்றது.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிராம மக்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் ஏற்பட்ட அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe