Ads Area

இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம்..| World Bank agrees to give huge loan to Sri Lanka.

 பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

கடந்த வாரம் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் அதிபரின் பணிப்புரையாளர் சாகல ரத்நாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேஸர் உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பணம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதல் பாகம் உடனடியாக வெளியிடப்படும் என்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe