Ads Area

கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்ற வித்தியாரம்ப விழா..!

 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 01 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா புதன்கிழமை (26) பாடசாலை வளாகத்தில்  நடைபெற்றது. 


"செயற்பாட்டு அடிப்படையிலான வாய் மொழி மூல ஆங்கிலம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் ஏ.எச்..அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. எப். நஸ்மியா சனூஸும் விசேட அதிதிகளாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியலாளர் இஸட்.ஏ.எம்.அஜ்மீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  


மேலும் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற தரம் 1 மாணவர்களை வரவேற்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe