Ads Area

சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும்.

 நூருள் ஹுதா உமர்


பாடசாலை மட்டத்தில் சுகாதாரம் குறித்த போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதனுடன் இணைந்ததான விழிப்புணர்வு மேடை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் புதன்கிழமை (26) கமு/ரீகே/தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

கனடா  இஸ்லாமிக் ரிலீஃப் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை இஸ்லாமிக் ரிலீஃப் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் தற்காலத்தில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை அவசியம் அறிந்திருப்பது தொடர்பிலும் அதற்காக கல்முனை சுகாதார பிராந்தியமும் அதன் பணிப்பாளரும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக அமுல்படுத்தும் முறைமை தொடர்பில் உரை ஒன்றையும் நிகழ்த்தினார்

இலங்கை இஸ்லாமிக் ரிலீஃப் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வை.பி. ஹுசைன் மற்றும் அதன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பாடசாலை கல்வி சமூகத்தினர் கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வில் மாணவர்களின் பங்களிப்புடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe