ஜெருசலேமில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இருக்கும் ஏணி ஒன்று 2 நூற்றண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருக்கிறது. அதன் இடத்தில் இருந்து இன்று வரை யாரும் அதனை நகர்த்தவில்லை.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் புனித தலமாக கருதப்படும் ஜெருசலேம், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமும் கூட. ஜெருசலேமிற்கு புனித யாத்திரை வரும் மக்கள் இந்த ஏணியையும் தவறாமல் பார்த்துவிட்டு செல்கின்றனர், அவ்வளவு முக்கிய காட்சிப்பொருளாகிவிட்டது!
ஏன் இந்த ஏணி 266 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறது?
ஜெருசலேமில் அமைந்துள்ளது புனித செபுல்கர் தேவாலயம். இந்த தேவாலயத்தின் வெளிபுறத்தில் ஒரு ஜன்னலுக்கு கீழே இருக்கிறது இந்த ஏணி. தேவாலயத்தில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வந்தவர்களில் ஒருவர் அந்த ஏணியை தவறுதலாக அங்கே விட்டுச் சென்றுவிட்டார்.
அப்போதிருந்து அந்த ஏணி அங்கேயே தான் இருக்கிறது. சரி தவறுதலாக வைக்கப்பட்டது தானே பின் ஏன் அங்கு விட்டு வைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறும் காரணம்,
இந்த சர்ச் சார்ந்த அனைத்து முடிவுகளையும் 6 கிறிஸ்தவ சமூகங்கள் தான் கலந்தாலோசித்து எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்த ஏணியை நகர்த்தலாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே இதன் இடம் மாற்றப்படுமாம்!
1759 ஆம் ஆண்டு புத்துப்பித்தல் பணிகளுக்காக வந்த வேலையாள் ஒருவர் அங்கு அந்த ஏணியை மறந்து விட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த ஏணி குறித்து கூறுபவர்கள், பல விதமான வெவ்வேறு சிந்தனைகளுடைய பல்வேறு கிறிஸ்தவ சமூகங்கள் உருவாகிவிட்டன, ஒரு ஒருவரும் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முயலுகின்றனர், அவர்களுக்குள் அடித்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த ஏணியை நகர்த்துவது பற்றி யாரும் எதையும் செய்வதில்லை என்கின்றனர்.