விசாக பூரரணை தினத்தில் தெளிவற்ற சந்திர கிரகணம் இலங்கை மக்களுக்கு காணக் கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றிரவு 08.44 அளவில் குறித்த சந்திரகிரகணம் ஆரம்பமாகி குறைவான இருண்ட நிழலில் சந்திரன் பிரவேசித்து நாளை சனிக்கிழமை அதிகாலை 1.1க்கு முடிவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிரவனின் ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது பூரணை தினங்களில் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.
இதன் விளைவாக சூரியனின் சில அல்லது அனைத்து ஒளியும் சந்திரனை அடைவதில் தடை ஏற்படுகிறது. இந்த கிரகணம் இன்று நள்ளிரவிற்கும் நாளைக்கும் இடையில் நிகழும் ஒரு தெளிவற்ற சந்திர கிரகணமாகும்.
முழுமையான சந்திரகிரகணத்தை இன்றிரவு 10.52க்கு நிகழுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த சந்திரகிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அந்தாட்டிக்கா பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் காண முடியும்.
அத்தோடு, இந்த ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இலங்கைக்கு ஒரு சிறந்த சந்திர கிரகணத்தை காணக்கூடியதாக இருக்கும்.
அதன் பின்னர் இலங்கை மக்களுக்கு அடுத்த சந்திர கிரகணம் எதிர்வரும் 2025ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியே காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.