Ads Area

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம்.

 (நூருல் ஹுதா உமர் )


கல்முனை பிராந்தியத்தின் முன்னணி அமைப்புக்களில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம் என்பன சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒன்றியத்தின் தலைமைக் காரியாலயத்தில் 2023.05.06 ஆம் திகதி; மாலை நடப்பாண்டுக்கான தவிசாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாதிக் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக ஒன்றியத்தின் அங்கத்தினர்களாக இருந்து மரணித்தவர்களுக்காகவும் சுகயீனமுற்றிருக்கும் தோழர்களின் ஆரோக்கியத்துக்காகவும் பிராத்தனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து

நடப்பாண்டுக்கான தவிசாளார் பொறியியலாளர் யூ.கே.எம். முஸாதிக் அவர்கள் தனது உரையின்போது ஒன்றியத்தின் கடந்து வந்த பாதைகள்; அங்கு இடம்பெற்ற முன்னெடுப்புக்கள், எதிர்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை விரிவாக எடுத்துக் கூறினார்.


புதிய தவிசாளர் பொறியியலாளர்  எம்.எம். நஸீர் அவர்களால் ஒன்றியத்துக்கு ஒருதொகை ரீ சேட்கள் வழங்கப்பட்டு; அவைகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் யூ.கே.எம். முஸாதிக் அவர்களின் கரங்களால் அங்கத்தினர்களுக்கு அவைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்: அதனடிப்படையில் தவிசாளராக பொறியியலாளர் எம்.எம். நஸீர், நிருவாகப் பணிப்பாளராக பிரதம தபாலதிபர் யூ.எல்.எம். பைஸர், நிதிப் பணிப்பாளராக ஓய்வுநிலை அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.  சலீம், உதவித் தவிசாளராக எம்.எம். ஜுனைடீன், திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக ஐ.எல். நயீம், ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர்  எம்.வை. அமீர், சட்ட ஆலோசகராக யூ.கே.எம். முஸாஜித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் பிரதி நிருவாகப் பணிப்பாளராக எம்.எம். உதுமாலெப்பை, பிரதி நிதிப் பணிப்பாளராக ஏ.எல்.எம். அன்வர், பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஐ. அலியார், யூ.எல்.எம். ஹனிபா, எம்.ஏ.சீ. எல். நஜீம், ஏ. பரீட்,  ஏ.எம் றஸ்மி, எம்.ஏ. றபீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


இங்கு உரையாற்றிய புதிய தவிசாளர் பொறியியலாளர்  எம்.எம். நஸீர் அவர்கள் தன்னை ஒன்றியத்தின் தவிசாளராக தெரிவு செய்தமைக்காக அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்தமையுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினார். இறுதியாக நிருவாகப் பணிப்பாளர் பிரதம தபாலதிபர்  யூ.எல்.எம். பைஸர் அவர்களது நன்றி உரையுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe