Ads Area

பித்த வெடிப்புகளுக்கு வீட்டிலேயே தீர்வு. Home Remedies

 பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ்



* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.


* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.


* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.


* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.


* வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.


* இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.


* குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe