Ads Area

ஓமானில் சித்திரவதைகளை அனுபவிக்கும் 74 பெண்கள்..!

 ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் 74 பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர்.


குறித்த பெண்கள் 9 மாதங்களாக சிக்கியுள்ள நிலையில், தங்களை நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும்,  நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதைகளை எதிர்கொண்டு இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.


இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,  தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe