Ranees Anees
மட்டக்களப்பு வண்ணத்து பூச்சி சமாதான பூங்கா ஏற்பாட்டில் சகோதர இனங்களைச் சேர்ந்த தரம்9_10 கல்வி கற்கும்_50 பாடசாலை மாணவிகள் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலுக்கு வருகை தந்துள்ளனர்.
இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்கிலும் மத வழிபாட்டுத் தளங்களை பார்வையிட்டு அதன் செயற்பாடுகளை அறிந்து கொள்ளும் நோக்கிலும் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு காத்தான்குடிக்கு வருகை தந்த தரம் 9,10 கல்வி கற்கும் 50 பாடசாலை மாணவிகள் பள்ளிவாயலை 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் தரிசித்தனர்.
அவர்களுக்கான பள்ளிவாயல் சுற்றுப் பயண நிகழ்வு அக்ஸா பள்ளிவாசல் மகளிர் அணியினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன்போது பள்ளிவாயல் பிரதம பேஷ் இமாம் அஷ் ஷேய்க் அல்ஹாபிழ் MMM இல்ஹாம் (பலாஹி) அவர்களும் மகளிர் குழுவுக்கு பொறுப்பான ஜனாபா ஷகீலா ஆசிரியை அவர்களும் பள்ளிவாயல் தொடர்பான விளக்கங்கள் வழங்கியதுடன் அவர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில்களும் தெளிவுகளையும் வழங்கினார்கள்.