Faisath Ahmed.
அம்பாறை மாவட்டத்தில் கால்களை இழந்த நபர்களுக்கான செயற்கை கால்கள் மற்றும் மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு friend-in need society artificial limp center மற்றும் Rotary club od capital city முழு அனுசரணை வழங்கியதுடன் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 28 நபர்களுக்கான செயற்கை கால்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலதிகமாக 06 நபர்களுக்கு தலைநகர் சென்று இலவசமாக கால்களை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட 242 பயனாளிகளுக்குமூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் பயனாளிகளில் ஒருவரான அட்டாளச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ.சீ நஜிமுடீன் கருத்து தெரிவிக்கையில்
"தலைநகர் சென்று சில இலட்சங்கள் செலவழித்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயற்கை கால்களை முற்று முழுதாக இலவசமாக காலடியில் தருவதற்கு ஒழுங்கு படுத்தி பொறுப்புடன் செயற்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்சார் சேர் அவர்களுக்கும் மூன்று நாள் நிகழ்வான இதனை செய்து முடிக்க அரும்பாடுபட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ். பாறூக் சேர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் அ.லெ. பைசாத் சேர் அவர்களுக்கும் மற்றும் சக உத்தியோகத்தர்களுக்கும் இறைவனின் ஆசி கிடைக்க வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்"
என்று குறிப்பிட்டார்.