சம்மாந்துறை பிரதேசத்தில் இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவிகளை பெற்ற பயனாளிகளுக்கு வியாபார உத்தரவு பத்திரம் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை கலாச்சார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது வியாபாரத்திற்கான உத்தரவு பத்திரம் பெறுவதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம், அதன் நன்மைகள், வியாபார உத்தரவு பத்திரம் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள் தொடர்பாக பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது..
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் மஜீட், இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வை.வீ.ஹுசையின், சம்மாந்துறை பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் எஸ்.ஏ.எச்.எஸ்.யஹியா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிக் றிலீப் நிறுவனமானது அம்பாரை மாவட்டத்திலுள்ள அநாதரவான குடும்பங்கள் மற்றும் அவர்களது சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல் (ILOCA) எனும் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 31 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800