( நிருபர்கள்:- ஏ.நாஸிம்,ஏ.பி. எம் இம்ரான், ஏ அறுஸ் முஹம்மட், அலியார் ஜெஸீம்,)
சம்மாந்துறை தப்லீக்குல் இஸ்லாம் அரபு கலாபீடத்தினுடைய 50 வருட பொன்விழாவும் 18வது பட்டமளிப்பு சிறப்பு நிகழ்வுகள் 2023. 5 .20 ஆம் திகதி சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மிக கோலாகலமாக வெற்றிகரமாக இடம் பெற்று முடிந்திருக்கின்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக குவைத் நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் அழைக்கப்பட்டிருந்தார் பிரதம பேச்சாளராக கொழும்பு ஸம் ஸம் பவுண்டேஷன் நிறுவனத்தின் தவிசாளரரும் இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவருமாகிய அஷ் ஷேக் அல்ஹாஜ் முஹம்மத் யூசுப் (முப்தி) அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விசேட கௌரவ அதிதிகளும் கலந்து கொண்டதோடு சம்மாந்துறையில் இருக்கின்ற உயர் பதவிகளை பெற்றவர்கள் மூத்த உலமாக்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் கல்விமான்கள் அரசியல் வாதிகள் பல்வேறு சமூக அமைப்புகள் என பலரும் நினைவில் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை அஷ் ஷேக் ஐ எம் இஸ்மாயில் (தப்லீகி) அவர்களின் தலைமையிலும் சம்மாந்துறை தப்லீக்குல் இஸ்லாம் கலாபீடத்தின் அதிபர் அஷ் ஷேக் எஸ். இஸ்மாலெவ்வை (தப்லீகி) அவர்களின் நெறிப்படுத்துதலின் கீழ் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றிருந்தது...
இதில் 35 மாணவர்கள் மௌலவி பட்டமும் 10 மாணவர்கள் அல் ஹாபில் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்வின் பிரதம அதிதிக்கு கலாபீடம் சார்பாக நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இன்நிகழ்வில் சம்மாந்துறையில் மாத்திரமில்லாமல் இலங்கையின் நான்காபுரத்திலிருந்தும் கிட்டத்தட்ட 4000 அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
வருகை தந்த மக்களுக்கு பகல் போசனம் அங்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதன் போது சம்மாந்துறை தப்லீக்குள் இஸ்லாம் அரபு கலாபீடத்தில் நீண்ட காலமாக குறையாக நிலவி வந்த ( மாஸ்ட பிளான்) நீண்ட கால நிர்மாண திட்டமிடலும் வெளியிடப்பட்டது
இதன் வெளியீட்டு உரையினை கலாபீடத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஏ சி ஏ எம் புஹாரி (கபுரி) அவர்கள் வழங்கினார்கள்
இதில் முதற்பகுதி நிர்மான திட்டம் அடங்கிய கோவையினை பிரதம அதிதி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டாவது பகுதி சமையல் அறை அதனோடு இணைந்த உணவு சாப்பிடும் அறை இரண்டுக்குமான நிர்மாண பணிகளுக்காக இந்தக் கலாபீடத்தின் ஆரம்ப காரண கர்த்தாவாக அல்லது இந்த கலாபீடத்தினை நிர்மாணிப்பதற்கு பக்கபலமாக இருந்த பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களிடம் இருந்து அரவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இத்திட்டமானது
10,485 ஸ்கொயர் பீட் கொண்ட தூர நோக்குள்ள இந்த நிர்மான பணிக்காக ஒரு ஸ்கேபிக்குக்கான செலவு மதிப்புடாக 6000/- ஆயிரம் ரூபாய் செலவிடப்படும் என இந்த மாஸ்ட பிளான் நிர்ணயம் செய்த பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இது தொடர்பில் மக்களிடம் இதற்கான பணத்தினை அளவீடு செய்ய குறித்த கலாபீடத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது இதற்கு அமைய பொது மக்களாகிய நீங்கள் உங்களுக்காக அல்லது உங்கள் உறவினர்களுக்காக அல்லது மரணித்தவர்களுக்காக நீங்கள் வழங்க முடியும் இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் சம்மாந்துறை தப்லீக்குள் இஸ்லாம் கலாபீடத்திற்கு சென்று உங்களுடைய பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதே போன்று வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள் குறித்த இந்த திட்டத்தில் இனைந்து நீங்களும் அன்பளிப்புக்ளை வழங்க முடியும் முழுமையான தகவல்களை கலாபீடத்தை தொடர்பு அறிய முடியும்.