Ads Area

மனித உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்…! Scientists are shocked

 நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.


இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிர் பிரியும் நேரத்தில் இருந்தவர்களின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி மரணத்திற்கு வழிவகுத்தது என்பதை இந்த ஆய்வாளர் குழு அடையாளம் கண்டுள்ளது.


இதற்கு முன்பு, விலங்குகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் காமா அலைகளின் எழுச்சி ஏற்படுவது தெரிகிறது. அதுவே இதயம் மற்றும் சுவாசம் நிற்கக் காரணமாக இருக்கிறது.


ஒரு நபர் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நான்கு இறக்கும் நோயாளிகள் உயிரிழக்கும் போது, அவர்கள் மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


அவர்கள் மூளையில் ஏற்படும் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சிக்னல்களை ஆய்வு செய்தனர். அந்த நான்கு நோயாளிகளும் நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் இரண்டு நோயாளிகளில் காமா செயல்பாடுகளால் குளோபல் ஹைபோக்ஸியா ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நினைவிழப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும், இறக்கும் செயல்பாட்டின் போது நோயாளிகள் மறைமுக உணர்வுடன் இருக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை.


உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது. இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது. உயிரிழக்கும் போது, மனித மூளையில் பின்புற கார்டிகல் பகுதிகள் செயல்படுத்தப்படுகிறதா என்பது நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது குறித்த விரிவான ஆய்வுகளை நடத்த வேண்டும்.. காமா அலை ஆரம்பத்தில் மூளையின் வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்திருந்தது.


கனவு காணும்போது, மர்ம காட்சிகளைக் காண்பதாகப் புகார் அளிக்கும் நோயாளிகளுக்கும் இங்கே தான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மூளையில் உள்ள வெப்ப மண்டலம் என்பது நினைவுகள் செயலாக்கத்திற்கு முக்கிய பகுதியாகும். அதேநேரம் நோயாளிகள் உயிரிழந்துவிட்டதால் உயர்ந்த காமா அலைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இருப்பினும், உயிரிழக்கும் சமயத்தில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. எனவே, மாரடைப்பு என்பது இதயத்தை மட்டும் பாதிக்காமல் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

thanks-thinakkural



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe