சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் ஹிஜ்ரா ஐக்கிய சமூக சேவைகள் ஒன்றியம் (Huswa) என்பவற்றின் அனுசரணையுடன் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து நடாத்தும் கா.பொ.த. சாதாரனதர (G .C.E.O/L) - 2022 மாணவர்களுக்கான இஸ்லாம் பாட மீட்டல் செயலமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.
பிரபல இஸ்லாம் பாட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் ஏ.என்.எம்.ஜுனைட் நஸீர் (நளீமி) அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்.
இதன்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் மஜீட், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் மெளலவி கே.எம்.கே.றம்சீன் காரியப்பர், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், நம்பிக்கையாளர் சபை பொதுச் செயலாளர் இஸ்ஹாக் (நளீமி), ஹிஜ்ரா ஐக்கிய சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவர் யூ.எல்.அப்துல் றசீட், ஹிஜ்ரா ஐக்கிய சமூக சேவைகள் ஒன்றியத்தின் செயலாளர் கே.எல்.நளீம், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜெ.எம்.அஷ்ரப் (பலாஹி) மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.