Ads Area

வெடுக்குநாறிமலைக்கு சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம்.

 வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு நேற்று (06.05.2023)  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.


வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.


குழுவினர் விஜயம்

கடந்த 28ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.


இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர்.


இதன்போது, நெடுங்கேணி பொலிஸார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

thanks-tamilwin



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe