சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதால் விலை 25 முதல் 30 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.