பொருத்தமான மண்ணுக்கு பொருத்தமான பயிர் சம்மாந்துறையில் சுமார் 35 ஏக்கர் மணற் தன்மையான பொருத்தமான நெற் காணிகளில் சிறு போகம் மற்றும் இடைப்போகத்தில் பாசிப்பயறு செய்கையும், பெரும்போகத்தில் வேளான்மையையும் ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்காக பயறுவிதைகள்இலவசமாக வழங்கப்பட்டதோடு வரிசையில் விதையிடும் இயந்திர உதவியும் செய்யப்பட்டது
(விதை உற்பத்திக்காக-𝐬𝐞𝐞𝐝𝐬 𝐩𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧-இவ்விதைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).
பயரு செய்கையின் மூலம் 𝟎𝟏 ஏக்கர் இல் இருந்து குறைந்தது 2.5 இலட்சம் வருமானம் ஈட்டமுடியும் என்பதோடு வருடத்தில் 02 முறை பாசிப்பயரும், ஒரு போகம் நெல் விவசாயத்தையும் மேற்கொண்டு எமது மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும் இதன் மூலம் எமது காணிகளில் இருந்து மண்வளம் குன்றாமல் உச்ச பயனையும் அடைந்து கொள்ள முடியும்.
👉🏻எதிர்காலங்களில் சம்மாந்துறையில் இவ்வாறான 3000 ஏக்கர் மணற் தன்மையான நெற் காணிகளில் இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்
சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப்பொறுப்பதிகாரியான 𝐌𝐓𝐌 𝐍𝐀𝐋𝐄𝐄𝐑 தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் சனீர், உதவி விவசாயப்பணிப்பாளர் சமந்த குமார, பாடவிதான உத்தியோகத்தர் நிஹார் மற்றும் காரியாலய விவசாயப்போதனாசிரியர்கள் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்
𝐟𝐨𝐫𝐦𝐨𝐫𝐞𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥_𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬𝐬
𝐌𝐓𝐌 𝐍𝐀𝐋𝐄𝐄𝐑 (𝐀𝐈/𝐎𝐈𝐂)
𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐀𝐠𝐫𝐢𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞
𝐒𝐚𝐦𝐦𝐚𝐧𝐭𝐡𝐮𝐫𝐚𝐢
𝟎𝟕𝟓𝟒𝟏𝟗𝟏𝟒𝟎𝟑