முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட பத்து இலங்கையர்களைக் கொண்ட மற்றுமொரு குழு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளது.
இந்தக் குழு இந்தியாவின் தனுஷ்கோடியை கப்பலில் சென்றடைந்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் இந்திய கடலோர பொலிஸார் விசாரணைக்காக இலங்கையர்களை மண்டபம் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 10 பேர் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு முறையாக வேலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து இலங்கையர்களை மண்டபம் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் கப்பலில் 5 பேர் தமிழகம் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்டபம் புனர்வாழ்வு மையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது தங்கியுள்ளனர்.
thanks-thinakkural