Ads Area

வீட்டில் இருந்து வௌியேறிய யுவதி மாயம்..பள்ளிவாசலின் CCTV இல் பதிவாகியது

 கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரியும் யுவதியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளார்.

கம்பளை வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்..

பேருந்தில் ஏறுவதற்கு வீட்டில் இருந்து வெலிகல்ல வரை சுமார் 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் அந்த வீதியின் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் சிசிடிவி கமெராவில் பாத்திமா வீதியில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.


அங்கிருந்து சுமார் 50 மீட்டருக்குப் பிறகு உள்ள சிசிடிவி கேமராவில் பாத்திமா நடந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் உள்ளூர்வாசிகள் யாரும் அவளைப் பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கம்பளை, வெலிகல்ல, மகாவலி கங்கை மற்றும் அதனை அண்மித்த வனப்பகுதிகளில் கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe