நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறையைச் சேர்ந்த நிர்வாக ஆளுமை ஏ.மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமிக்க பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அப்பரிந்துரையை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

