Ads Area

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களுக்கு ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு.

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில்  கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில்  புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு  சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவை வழங்கி வைத்தார்.


 இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.யாக்கூப், ஒய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் முகம்மட் தம்பி, ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe