Ads Area

அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு.


தகவல் - முஹமட் றிஸ்வான் (அதிபர்)


கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையினால் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு.


கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி கிளையினால் அதன் பணிப்பாளர் மேஜர் N.T. நசுமுதீன் அவர்களின் தலைமையில் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு 14.06.2023 புதன்கிழமை கமு/சது/அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சம்மாந்துறையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வளவாளர்களாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி A.V. மர்சூத் அவர்களும், கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் Y. ஹபீபுல்லா அவர்களும், அம்பாறை ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய முகாமையாளர் கலாநிதி கோகிலா பிரியன்தி அவர்களும், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் P.M. யாசிர் அரபாத் முஹைடீன் அவர்களும் கலந்து கொண்டனர்.


 மேலும் இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் A.L. அப்துல் மஜீத் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe