சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) தேசமாண்ய ஆதம்வாவா மன்சூர் சேரின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், அவர் பற்றிய "மன்சூர் எனும் நிருவாக ஆளுமை" நூல் வெளியீடும் இன்று (11) 4.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகப் பிரமான்டமாக இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில் வெளியீடு செய்யப்படும் "மன்சூர் எனும் நிருவாக ஆளுமை" என்ற நூல், அவரின் தாய் தந்தையர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

