Ads Area

ஓட்டமாவடியில் மக்கள் வீதிக்கிறங்கி நீதி கேட்டு போராட்டம்.

 


 (சுஆத் அப்துல்லாஹ்)


அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபை உதவிக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படாத பொதுமக்கள் இன்று (26) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்"  ஏழை, எளிய வறிய மக்களுக்கு அஸ்வெசும் திட்டம் வழங்கப்பட வேண்டும் "எடுக்க வேண்டும் எங்கள் கிராமத்தை கவனமெடுக்க வேண்டும்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் போராட்டம் செய்தனர்.


ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பிரதேச செயலகம் வரை சென்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe