சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும நிருவாக திறமை காரணமாக இவ்வருடத்தின் 4 வது காணி உத்தரவு பத்திரம் மற்றும் அழைப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு அண்மையில் (22) பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் கலந்துகொண்டு சுமார் 80 காணி உத்தரவு பத்திரம் ,அளிப்பு பத்திரங்கள்ளை வழங்கி வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக நீர்ப்பாசன பொறியியலாளர் Eng M.S.M. நவாஸ் , வலயக் கல்விப் பணிப்பாளர் SMM. உமர் மொளலானா, மாவட்ட காணி தலைமை பீட உத்தியோகத்தர் K.M. முஸம்மில் , நில அளவை அத்தியட்சகர், விவசாய விரிவாக்கல் பொறுப்பதிகாரி(மல்வத்தை), சம்மாந்துறை பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் , நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி, மஜ்லிஸ் அஸ்சூரா மற்றும் பள்ளிவாயல் நிர்வாக சபைகளின் பிரதிநிதிகள், வீரமுனை கோயில் தர்மகர்த்தா சபை பிரதிநிதி, சம்மாந்துறை வர்த்தக சங்க தலைவர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி, சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் U.M. அஸ்லம், கணக்காளர் I.M.பாரீஸ் ,நிருவாக உத்தியோகத்தர் J.M ஜெமில் , மேலதிக மாவட்ட பதிவாளர், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், காணி உத்தியோகத்தர்கள், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் , மற்றும் காணிப் பிரிவு தலைமை முகாமைத்துவ உத்தியோகத்தர், மற்றும் கிளை தலைவர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வனவிலங்குகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.