Ads Area

அவசரப்பட்ட அறிக்கையினால் அவதிப்படும் யஹ்யகான்!



'ஆக ரெண்டு நசிவ' - 

அதற்கும் பிரதேசவாதமும், அரசியலும்!!



350 கி.மீ. ஐ குறைத்து வெறும் 14 கி.மீ. தூரத்துக்குள் சென்று 'பாஸ்போட் எடுங்க எண்டு' அரசாங்கம் சலுகையை வழங்கினா அத வெச்சி சந்தோசப்படாம...! கொழும்பிலிருந்து கொண்டு வாக்கு வங்கிகளை அலங்கரிக்கலாம் என்ற பகல் கனவுடன் முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர் ஏ.சி. யஹ்யாகான் விட்டிருக்கும் அறிக்கையானது அவரது பிரதேசவாதத்தை அச்சொட்டாக எடுத்துக் காட்டுகின்றது. 


நல்ல காலம் இனவாதிகள் கண்களுக்கு இந்த லிஸ்ட் படல்ல. உண்மையிலேயே இவ்வாறனவர்கள்  போன்ற சுய இலாப அரசியல்வாதிகள் சீசனுக்கு ஆலா வட்டம் போடுவதனால்தான் இன்னும் இன்னும் இந்த நாடு அரசியல், பொருளாதார சீரழிவுகளை எதிர்நோக்குகின்றது. 


ஒரு அரசியல்வாதி என்பவர் கிணற்றுத் தவளைபோல் ஒரு வட்டத்துக்குள் சுற்றினால் தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக 'அரிசி பேக்' உடன் தான் அலைய வேண்டிவரும். இது பலராலும் அறியப்பட்ட உண்மை. இதனை மறுதலிப்பதானால் முளைத்துவருகின்ற அரசியல்வாதிகள்  பக்குவத்தினாலும், பண்பாடுகளினாலும் மட்டும்தான் முன்னோக்கி நகரலாமே தவிர: உப்புச் சப்பில்லா அறிக்கைகளால் எதனையும் சாதிக்க முடியாது. 


கடவுச் சீட்டு கைவிரல் அடையாளம் பெறப்படும் இடங்களடங்கிய பட்டியலை பார்த்தால் பெரும்பாலானவை குறித்த மாவட்டத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ நடுநிலையான தூரம் மற்றும் போக்குவரத்து அதே நேரம் நெரிசல்கள் குறைந்த பகுதியாகவே காணப்படுகின்றன. 


இந்த விடயத்தில் அரசாங்கத்தின் திட்டமிடலில் பிரதேசவாதங்களோ அல்லது இன ரீதியான பாகுபாடோ எதுவுமே குறிவைக்கப்படவில்லை என்பது தெளிவாக புரிகின்றது. உண்மையிலேயே எமது நாட்டில் இவ்வாறான சமத்துவ காலாச்சாரத்துக்கு வித்திடுவதனை வரவேற்று நன்றி தெரிவிக்க வேண்டும். 


இந் நிலைமையில் பேசுவதற்கும், பேசு பொருளாவதற்கும் வழியில்லாதது போல் இவர் அறிக்கைவிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. அது மாத்திரமல்ல கல்முனைப் பிரதேசத்தில் வாக்கு வங்கிகூட இல்லாதவர்கள் இன்று கல்முனை – சம்மாந்துறைக்கான உறவுப் பாலத்தை வெறும் அறிக்கைகளால் பிணக்குகள் ஏற்படுத்துவதை சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். 


வெறுமெனே ஒருவர் விட்ட உப்புச்சப்பற்ற அறிக்கையினால் ஆரோக்கியமான இரு ஊர்களுக்கிடையிலான நல்லுறவை மாறி மாறி பலரும் விடுகின்ற சமூக வலைத்தள கருத்துக்கள் சிதைத்துவிடும். இவ்வாறானவர்களை இனங்கான இவ்வாறான அறிக்கைகள் மக்களுக்கு பெறுமதியான சந்தர்ப்பம். மக்கள் விழிக்க வேண்டிய உன்னதமான சந்தர்ப்பம் இதுதான். 


எப்போதும் நம் அரசியல்வாதிகள் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இனவாதத்தால் கிடைத்த ஆட்சியும், பிரதேசவாத்தால் கிடைக்கும் அதிகாரமும்; நிலைத்த சரித்திரமே இல்லை. இதற்கு உதாரணம் வெகு தூரத்திலுமில்லை. அனைவரும் அறிந்த சம்பவங்கள் இன்னும் யார் மனதையும் விட்டு அகலவில்லை. 


பேனவும், 'பேப்பரும்' போய் பேஸ்புக் மலிஞ்ச காலத்துல மடத்தனமான அறிக்கைகளால் பக்கத்தில் கிடைத்த சலுகையையும் தூரமாக்கிவிடாதீர்கள் குறுகிய சிந்தனை கொண்ட அரசியல் ஞானிகளே!


இங்கு இன்னுமொரு கடந்த கால விடயத்தை நினைவுபடுத்திப் பார்ப்போமானால் கல்முனையில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கதறக் கதற பறித்துச் சென்ற போது சமூக ஆர்வலர் யஹ்கான் எங்கு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் விட்ட அறிக்கைகளும், கிடைத்த வெற்;றியும் என்ன? 


இதுபோக குறித்த அறிக்கையில் 'கிழக்கின் முக வெற்றிலை என அறியப்படும் கல்முனை மாநகரம் தவிர்க்கப்பட்டிருப்பது இங்குள்ள மக்களுக்கு பெரும் துயர் நிறைந்த செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.' - இந்த வசனம் குறித்து ஆராய்வதற்காக ஒரு சிலரை தொடர்பு கொண்டேன் அதில் சிலர் அழைப்பிற்கு பதிலில்லை. பதிலளித்தவர்கள் அனைவரும் 'இப்படியான கூற்று ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று வெறுமெமேன அவரது அரசியல் இலாபத்திற்காக அறிக்கை விட்டிருக்கிறார்' - என்றே கூறினர். 


எனவே, அரசியல் சாகச வித்தைகளுக்காக சமூகத்தைக் கூறுபோடுவதிலிருந்து ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பண்பட வேண்டியது தற்காலத்தில் இன்றியமைதனவாகும். 


✍️ கியாஸ் ஏ. புஹாரி




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe