கமு/சது/சபூர் வித்தியாலயத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வும் சிறுவர் சந்தையும் கல்லூரியின் அதிபர் MBM SAFIR Sir அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இன்று (2023/06/15) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சம்மாந்துறை வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆசாத் எம் ஹனிபா அவர்களும், விசேஷட அதிதிகளாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ரம்ஷின் காரியப்பர், செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் இஸ்ஹாக், கமு /சது /ஹம்றா வித்தியாலய அதிபர் றிஸ்வான் sir, கமு/சது /முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் முத்தலிப் sir மற்றும் கைர் ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் ரமீஷ் ஹாபிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்..
உலக சுற்றாடல் தின நிகழ்வு "பிளாஸ்றிக் பொருட்களால் ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்போம்" எனும் தொனிப்பொருளில் டொக்டர் ஆஷாத் அவர்களால் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் சிறுவர் சந்தையில் பொருட்களை நுகர்வதற்காக சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விஷேட பைகளையும் விநியோகித்தார்.
அதன் பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறுவர் சந்தை வெகு விமர்சையாக இடம் பெற்றது.
பிரதி அதிபர் K. L அஸீஸ் Sir மற்றும் ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் மருதூர் ஏ ஹஸன் Sir அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வானது, மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதனால், பாடசாலை சமூகம். பாடசாலை நிர்வாகத்திற்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தது.







