Ads Area

சம்மாந்துறை இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ரோமானிய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தில் பிறந்த சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி என்றழைக்கப்படும் சோ.வினோஜ்குமார் என்ற மாணவன் ரோமானிய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காகவே இவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


Ministry of Research, Innovation & Digitalization, Romania  இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறான உயரிய விருதுகள் பலவற்றிற்குத் தகுதியான உங்கள் வெற்றிப் பயணங்கள் தொடர சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe