Ads Area

சவூதியில் விமானியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்த குற்றவாளி தூக்கிலிடப்பட்டார்..!

 


சவுதி ஏர்லைன்ஸ் விமானி பந்தர் அல் கர்ஹாதியை தனது காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவூதி அரேபிய குடிமகனான பரகத் பின் ஜப்ரீன் கனானி மக்கா மாகாணத்தில் நேற்று தூக்கிலிடப்பட்டார்.


கடந்த டிசம்பரில், சவுதி ஏர்லைன்ஸ் விமானி பந்தர் கர்ஹாதி அவரது நண்பரான பரகத் பின் ஜப்ரீன் கனனியால் பரிதாபமாக கொல்லப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில், குற்றம் சாட்டப்பட்டவர் பண்டாரை காரில் ஏற்றி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.


அவருக்கு ஜித்தா குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. கொடூரமான கொலையின் விசாரணை மற்றும் மரணதண்டனை மிக விரைவாக முடிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, கொலை செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் குற்றவாளி தூக்கிலிடப்பட்டார்.


Thanks - Arab tamil news




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe