சம்மாந்துறை அன்சார்.
குவைத் நாட்டின் பாதுகாப்பையும், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடும் பொது ஒழுக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தீவிர முயற்சியின் பயனாக குவைத்தில் சட்டவிரோத செயற்பாடான விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத்தில் உள்ள மஹ்பூலா பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து வெளிநாட்டவர்களும், ஐந்து வெளிநாட்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

