Ads Area

மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டத்தில் தெருவிளக்கு பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

 (சர்ஜுன் லாபீர்)

அண்மையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட மருதமுனை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள உள்ளக தெருக்களுக்கான மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் இன்று(05)  மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றது.


கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர்  ஏ.எஸ்.எம் அஸீம்,பொறியியலாளர்  ஏ.ஜ.ஜெளஸி தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் உடபட பலரும் கலந்து கொண்டனர்.


இவ் வீட்டுத்திட்டத்தில் ஏற்கனவே தனித் தனி வீடுகளுக்கான மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தெருக்குகளில் உள்ள மின் விளக்குகள் இதுவரை காலமும் இல்லாமையினால் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கும்,கஸ்டங்களுக்கும் உட்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe