உலக சுற்றாடல் தினத்தை அனுஷ்டிக்கு முகமாக சுற்றாடல் தினமான இன்று (05) Beat plastic pollution எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் M.I.M இஷ்ஹாக் அவர்கள் கலந்து கொண்டு விசேட உரை ஆற்றினார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் U.M. அஸ்லம் , கணக்காளர் I.M.பாரீஸ் , பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி A.L.M அஸ்லம் ,நிருவாக உத்தியோகத்தர் J.M ஜெமில்,மேலதிக மாவட்ட பதிவாளர் , கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர், சமுத்தி தலைமைபீட முகாமையாளர் மற்றும் கிளை தலைவர்கள் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக பிரதேச செயலகம் முன்றலில் மர நடுகையும் இடம்பெற்றது.


