வணிக வாரத்தினை நடாத்துதல்- 2023
எனும் தலைப்பிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய எமது பாடசாலையில் கற்கும் க.பொ.த (உயர் தரம்) வணிகத் துறை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகவார வர்த்தக சந்தை 2023.07.11 அன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை வளாகத்தில் அதிபர் நஜீபா றஹீம் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ எல் மஜீட் (PSI coordinator) சிறப்பு அதிதியாக ஜனாப் எம். ஏ .எம். றசீட் (ISA , commerce) பிரதி அதிபர்கள் நிகழ்வின் இணைப்பாளராக கலை வர்த்தகத்துறைக்குப் பொறுப்பான பகுதித் தலைவர் திருமதி எஸ். எல். உமாமா மற்றும் ஆசிரியர் குழாம் கலை வர்த்தக மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
2023.07.12 இன்று இரண்டாம் நாள் நிகழ்வாக மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் ,வழிகாட்டல் ஆலோசனை ,ஆற்றுப்படுத்தல்
இடம் பெற்றன. நிகழ்வில் வளவாளர்களாக, இர்பான் மௌலானா (திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) அப்துல் ரஹீம் பிரதர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான கண்ணியத்துக்குரிய அல்ஹாஜ் இஸ்மாயில் மௌலவி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.