முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MIM. மன்சூர் அவர்கள் இன்று (2023.07.11) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் ஆஷாத் M ஹனீபா அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் தான் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது தனது முழு முயற்சியின் பலனாக சைனா அரசின் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்ட 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதியின் (55 ஆயிரம் சதுரடி) நிர்மான வேலைகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு, குறித்த கட்டிடத் தொகுதிக்கான இறுதிக்கட்ட வேலைகள் நிதியின்மையால் கைவிடப்பட்டிருப்பதனை அறிந்து, குறித்த வேலைகளுக்குத் தேவையான நிதியினை அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்தார்.
-ஊடகப்பிரிவு-