Ads Area

இராணுவத்தினரால் கனகர் கிராம மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டம்.



பாறுக் ஷிஹான் 


ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், 1987ம் ஆண்டு உச்சக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராம மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டுள்ளார்.


இன்று (11) கனகர் கிராமத்திலுள்ள இந்த 500 ஏக்கர் நிலப்பரப்பில்  போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத்திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின்  கோரிக்கையின் பேரில் உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் IBC இன் நிறுவனத்தலைவர் க.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் இந்த நிலத்தை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


மேலும், போரினால் பாதிக்கப்பட்ட கனகர் கிராம  குடும்பங்களுக்கு ஆதரவாக இம்மறுவாழ்வுக் கிராமத்தை அமைப்பதில் மாண்புமிகு கலையரசன் எம்.பி தீவிரமான மற்றும் அர்ப்பணிப்புடன் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe