Ads Area

குவைத்தில் வாகன விபத்தில் தமிழக பெண்மணி மரணம் - உடலை தாயகம் அனுப்பும் பணி தீவிரம்.

தமிழகம் ராயபுரம் புதுவண்ணார் பேட்டையை சேர்ந்தவர் ரஹ்மத் என்ற பெண் மணி வயது (60) கணவர் பெயர் சேக் முகம்மது தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். 


கால்சியா பகுதியில் கடந்த 19.07.2023 புதன் அன்று  சாலையை கடக்கும் போது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் பலத்த காயமுற்ற நிலையில் மரணித்து விட்டார்.


இது குறித்து அவரது உறவினர்கள் ரபீக், அப்துல் ஹலீல், முகம்மது யூசுப் ஆகியோர் கடந்த 21.07.2013 அன்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவிட கோரிக்கை வைத்தனர். 


உடனடியாக விபத்தில் மரணித்த ரஹ்மத் என்ற பெண்மணியின் உடலை தாயகம் அனுப்பும் பணியில் சங்கத்தினர் ஈடு பட்டுள்ளனர்.


வெள்ளி சனி விடுமுறையிலும் அதற்கான பணிகளை விரைவாக குவைத் & இந்திய தூதரக பணிகள் முடிக்க பட்டு 23.07.2023 ஞாயிறு இன்று மதியம் தூதரக அதிகாரி முன்னிலையில் உடல் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கபட்டு இரவு 10.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப் படுகிறது. 


24.07.2023 திங்கள் அன்று காலை சென்னையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை&நலச் சங்கம் . மாநில துணை தலைவர் நூருல்லாஹ் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினரான தோழர் நவாஸ்கனி அவர்களின் உதவியாளர் மூலம் இறந்து பின் ரஹ்மத் அவர்களின் உடல் விரைவாக பெறப் பட்டு தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி மூலம் சென்னை ராயபுரம் எடுத்து செல்லப் பட்டு நல்லடக்கம் செய்யப் பட உள்ளது. 


மேலும் இதில் சமூக ஆர்வலர் tvs கீரணி. மதி அவர்களின் முயற்சியில் M.A.ஹைதர் குழுமம் கார்கோ டிராவல்ஸ் சார்பில் 40 தினார் பொறுப்பேற்று கொண்டனர்  நிறுவனர் ஹைதர் அலி அவர்களுக்கும் மேலாளர் ஆரிப் அவர்களுக்கு தலைவர் நவ்சாத் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் நன்றியை தெரிவித்து கொண்டனர்.


செய்தி

மணிகண்டன் & நபீல்கரீம் & சபரி

ஊடக செயலாளர்கள் 

குவைத் மண்டலம் 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe