Ads Area

குர்ஆன் எரிப்பு விவகாரம் – சுவீடன் பொருட்களை சந்தையிலிருந்து அகற்றும் கத்தார் அல் பலதீ சந்தை!

ஸ்வீடன் காவல்துறையின் அனுமதியுடன் சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த குர்ஆன் அவமதிப்பு காரணமாக அனைத்து சுவீடன் தயாரிப்புகளும் தனது கிளைகளில் விற்கப்படாது என்று கத்தாரின் பிரபல  Souq Al Baladi சந்தையின் நிருவாகம் அறிவித்துள்ளது.


சமூக ஊடகங்களின் ஊடாக , அனைத்து சுவீடன் தயாரிப்புகளும் “மறு அறிவிப்பு வரும் வரை” புறக்கணிக்கப்படும் என்பதாக அல் பலாடி (Al Baladi) தெரிவித்துள்ளார்கள்.


இந்த வார ஆரம்பத்தில் , ஸ்வீடனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியே ஒரு நபர் புனித குர்ஆனின் பிரதியை இழிவுபடுத்த அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய உலகிலும், அரபு நாடுகளிலும் சுவீடனுக்கு எதிராக கடும் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளன. இதே நபர் கடந்த மாதம் ஸ்வீடன் அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அனுமதியின் கீழ் முஸ்லிம்கள் உயர்வாக மதிக்கும் அல் குர்ஆனை அவமதிக்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - கத்தார் தமிழ்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe