Ads Area

டாக்சி தொழிலும் கத்தாரும், விழிப்புணர்வுக்கான ஒரு பதிவு.

(எஸ.எச்.எம். பிர்தௌஸ் – Doha Qatar)


கத்தார் வந்தால் Uber மற்றும் Karwa Taxi ஐ ஓடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் பலர் இங்கே வந்து தற்போது மிகவும் அல்லல் படுகின்றனர்.


தாங்கள் ஓடும் லிமோ காருக்கு கூட மாதவாடகை கட்ட வழி இன்றி துன்பப்படுகின்றனர்.இங்கே அந்த துறையில் சம்பாதிக்கும் காலம் ஒன்று அப்போது இருந்தது என்பது உண்மைதான் என்ற போதிலும் FIFA உலக கோப்பை விடயம் நிறைவடைந்த பின்னர் எதுவுமே தற்போது எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே இல்லை என்பதே உண்மை.


நாட்டில் தற்போது தொழில் இல்லை எனவே கத்தாருக்கு நானும் சென்று ஒரு வாகனத்தை எடுத்து டாக்ஸி ஓடுவோம் என்ற நினைப்பில் பலர் இங்கே வந்து லிமோஷன் கம்பெனிகளில் இணைந்து தங்கள் விசாக்களை அந்த லிமோஷன் கம்பெனிக்கு மாற்றிவிட்டு தாங்களும் இதே துன்ப நிலையை அனுபவிக்கின்றனர்.


உண்மை என்பது இதற்கு நேர்மாறானதாகும், நானும் இங்கே அதே தொழில் செய்யும் ஒருவனாக இருப்பதால் உண்மை நிலையை இங்கே வந்து உழைக்கலாம் என்ற நோக்கில் வருபவர்களுக்கு கூற விரும்புகின்றேன்.


சிலர் சொல்வதைப் போல் தாங்கள் தினமும் 300 ரியால் 350 ரியால்களுக்கு 250 தாங்கள் தொழில் செய்வதாக பொய் கூறுகின்றனர் சிலவேளை அது கூட உண்மையாக இருந்தாலும் அதற்கான செலவுகள் அவர்களுக்கு இந்த அவர்கள் சம்பாதிக்கும் தொகையை விட அதிகமானதாகவே தினமும் இருக்கும் என்பதே உண்மையாகும்.


அண்ணளவாக ஒருவர் தினமும் 250 ரூபாய்க்கு ஓடுகின்றார் என்றால் அதற்கான செலவுகளை இங்கே நான் பட்டியலிட்டு காட்ட விரும்புகின்றேன்.


அவர் பாவிக்கும் காருக்கு தின வாடகை 80 ரியால்கள் , பெட்ரோல் நிரப்புவதற்காக 70 ரியால்கள் , அவரின் உணவு தேவைக்கு 30 ரியால்கள் ,ஏனைய தங்குமிட நெட் செலவுகள் என 20 ரியால்கள் என சென்றால் அவர் தினமும் ஓடும் 250 ரியால்களில் இருந்து 200 ரியால்கள் போனால் 50 ரியால்கள் மாத்திரமே அவருக்கு கையில் அவருக்காக மிஞ்சும் அல்லவா ?

இது மாதம் ஒன்றுக்கு 1500 ரியாலகளாக இருக்கும் ,ஆனால் ஒருவர் தினமும் 250 ரியால்கள் ஓடுகின்றார் என்பதை யாரும் உறுதியாக கூற முடியாது.


சில வேளை 200 ,சில நேரம் 150 சில நேரம் அதுகூட இல்லை ,காரணம் தற்போது இங்கே யாரும் அதிகமாக இந்த டாக்சிகளை விரும்பாமல் மெட்ரோ மற்றும் அதனோடு இணைந்த பஸ் சேவைகளையே பயன்படுத்துகின்றனர் ,

ஆனால் இங்கு வரும் ஒருவர் தனக்கு சொந்தமாக ஒரு வாகனத்தை கொள்வனவு செய்யும் முதலீடுகளோடு வந்ததால் அவருக்கு அந்த வாகனத்தின் வாடகை மேலதிகமாக மிஞ்சும்.


ஆனால் அதற்கு நாட்டு பணம் சுமார் ஆகக் குறைந்தது 30 இலட்சங்களாவது வேண்டும் ,அவ்வாறு உள்ளவர் இங்கு தொழில் செய்ய வருவார் என்பது சந்தேகமே.


ஆக இங்கே இந்த தொழில் ஆசையில் வருவோர் இது குறித்து சிலர் சொல்லும் பொய்களை நம்பி வந்து ஏமாறாமல் உண்மை நிலையை நன்றாக ஆராய்ந்து அறிந்து வந்து இந்த தொழில் முயற்சியில் இணையுமாறு உங்களை வேண்டுகின்றேன்.


எமது நாட்டு பல உறவுகள் நட்புகள் இங்கு இந்த தொழில் முயற்சியில் இறங்கி படும் அவஸ்தைகள் குறித்து உணர்ந்து இதை பதிவிடுகின்றேன்.இதை விட சிறப்பாக பலர் தங்கள் வருமானங்களை இந்த தொழில் மூலம் பெறுகின்றனர் என்றால் அது அவர்களது கடினமான முயற்சியும் அவர்கள் தங்கள் கை வசம் வைத்துள்ள நிலையான வாடிக்கையாளர்கள் என்பதன் மூலமாகத்தான் இருக்கும் என்பதே என் கருத்து.


இதை நம்புவதும் நம்பாமல் விடுவதும் இதற்கு மேல் உங்களை பொறுத்தது ,நானும் இதே தொழில் முயற்சியில் தான் இங்கே உள்ளேன் என்பதால் உண்மையை ஏனையவர்களுக்கும் தெரிவித்து கொள்கின்றேன்.


உண்மையில் கொண்டதை கோழையாக்குவதா என்ற வகையில் ஏனையவர்களும் தாங்கள் படும் அவஸ்தைகளை பட்டு பார்க்கட்டும் என்ற நினைப்பில் சிலர் வேண்டுமென்றே பொய்களை கூறி வேறு கம்பனி வேலைகளில் உள்ளவர்களையும் இந்த டாக்சி தொழிலுக்குள் இறக்கி பாழாக்கி விட்டுள்ளனர் என்பதையும் இங்கே கூறி கொள்கின்றேன்




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe