Ads Area

உடற்கல்வி ஆசிரியர் மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி : வைத்தியசாலையில் அனுமதி - ஆசிரியர் தலைமைறைவு

 பாறுக் ஷிஹான்.


பாடசாலையொன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார்.


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பகுதியிலுள்ள பிரபல  அரச பாடசாலையொன்றில் கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன்  துஸ்பிரயோக முயற்சிக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.


சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதனையடுத்து இச்சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸார் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனான தரம் 9 வகுப்பில் கல்வி கற்கின்ற குறித்த மாணவனிடம் வாக்குமூலமொன்றை இரு தடவை பெற்றுச்சென்றுள்ளதுடன், மாணவனை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக தாயார் குறிப்பிட்டார்.


இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோக முயற்சிக்கு  உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் தனது மகன்  புதன்கிழமை (2) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  வாக்குமூலகளைப் பெற்றுச்சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.


இவ்விடயம்  தொடர்பில் எந்தத்தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe