Ads Area

போதைக்கு எதிரான பேரணி : வீதிக்கிறங்கிய அல்-ஹிலால் மாணவர்களும், உயர் அதிகாரிகளும்.

 நூருல் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கெதிரான வீதி ஊர்வலமும், போதைக்கெதிரான பிரசாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது. 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வாகனத்தில் போதைப்பவனைக்கெதிரான பிரசாரங்களுடன் பாடசாலை முன்றலில் ஆரம்பித்த இப்பேரணி சாய்ந்தமருது பொதுச்சந்தை வரை சென்று மீண்டும் மாளிகா சந்திவரை தொடர்ந்து மீளவும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது. 


இப்பேரணியின் போது போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை கலந்து கொண்ட அதிதிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கி வைத்தனர். 


இப்பேரணியில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்விப் பணிப்பாளருமான எம்.என்.ஏ.மலீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹீர், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரமுகர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன், மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe