ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்கான் முகம்மட் அவர்களின் பூரண முயற்சியால் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் பஸ் வண்டி ஒன்று மிக விரைவில் வழங்கி வைக்கப்பட உள்ளது.
கல்லூரி அதிபரின் கோரிக்கை அமைய தொடர்ச்சியாக றிஸ்கான் முகம்மட் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று விரைவில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு பேருந்து (BUS) வண்டி ஒன்றை வழங்குவதாக கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார்.
எதிர்கட்சி அலுவலகத்தில் கௌரவ.சஜித் பிரேமதாசா அவர்களை சந்தித்து இது சம்பந்தமாக பேசி, நினைவூட்டல் கடிதம் ஒன்றை மீண்டும் வழங்கி வைத்ததன் பின்னர் விரைவில் உங்களது கல்லூரிக்கு பேருந்து வண்டி ஒன்று வழங்கி வைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக ரிஸ்கான் முஹமட் தெரிவித்துள்ளார்.