சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பசுமையான நாடு எனும் தோணி பொருளில் மரம் நடும் நிகழ்வு நிந்தவூர் அல்-மினா வித்யாலயத்தில் நிந்தவூர் சிட்டிசன் இளைஞர் கழகத்தின் தலைவர் பகாத் யாகூப் அவர்களின் ஏற்பாட்டிலும் பாடசாலை அதிபர்.M.H.M.ராபியு அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இம்மர நடுகை நிகழ்வுக்கு அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் வரிசைப்படுத்தல் படையின் திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயலாளருமான. றிஸ்கான் முகம்மட் அவர்கள் கலந்து கொண்டு மரத்தினை நாட்டி வைத்தார்.
மற்றும் இன் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி M.I.M.பரீட், அட்டாளச்சேனை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி B.M.றியாத் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.