அறுவை சிகிச்சை செய்து கைரேகையை மாற்றிக் கொண்டு குவைத் திரும்பிய 2 ஆசியர்கள் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைரேகை பதிவுகள் தெளிவாகத் தெரியாதபடி மேல் அடுக்குகளை வெட்டினர். காயம் காய்ந்ததும், ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் பிடிபட மாட்டோம் என நினைத்து குவைத் செல்லும் விமானத்தில் ஏறினர்.
ஆனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே விசாரணை செய்ததில் 5 விரல்களின் நுனியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பல்வேறு குற்றங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர்கள் மீண்டும் குவைத்துக்குள் நுழைய முடியாது. இதை சமாளிக்க இருவரும் அறுவை சிகிச்சை மூலம் கைரேகையை மாற்றிக்கொண்டனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் புதிய வழிகளைப் பயன்படுத்தி திரும்பி வருவதால், நுழைவு வாயில்களில் அதிநவீன பயோமெட்ரிக் ஸ்கேனிங் அமைப்பை நிறுவுவதன் மூலம் குவைத் சோதனைகளை தீவிரப்படுத்துகிறது.